2025 ஜூலை 16, புதன்கிழமை

மிதிவெடியில் சிக்கி குடும்பஸ்தர் படுகாயம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான், யோ.வித்தியா

கிளிநொச்சி, பளை பகுதியில் வேட்டைக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மிதிவெடியில் சிக்கி தனது வலது காலை இழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (08) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

பளை, இத்தாவில் பகுதியைச் சேர்ந்த எஸ்.செல்வராஜா (வயது 63) என்பவரே இவ்வாறு மிதிவெடியில் சிக்கி காலை இழந்துள்ளார்.

பளை காட்டு பகுதிக்குள் வேட்டைக்கு சென்றுள்ள இவர், எல்லையை மீறி மிதிவெடி அபாயமுள்ள பகுதிக்குள் சென்றுள்ளார். இதன்போதே மிதிவெடி வெடித்தத்தில் படுகாயமடைந்துள்ளார்.

மிதிவெடி அகற்றும் பணியாளர்களால் இந்நபர் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .