2025 ஜூலை 16, புதன்கிழமை

இந்திய வீட்டுதிட்டம் கிடைக்கவில்லையெனக் கூறி மகஜர் கையளிப்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 10 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


மன்னார், இசைமாலைத்தாழ்வு கிராமத்துக்கு  இந்திய வீட்டுத்திட்டம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, இந்திய துணைத்தூதர் சு.தட்சணாமூர்த்தியிடம் அக்கிராம மக்கள் இன்று புதன்கிழமை (10) மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

இந்திய துணைத்தூதருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான சந்திப்பு வவுனியா தம்பா ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போதே இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.

இதன்போது தாங்கள் மீள்குடியேறி பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், தங்களது கிராமத்துக்கு இந்திய வீட்டுத்திட்டம் கிடைக்கவில்லை. இது தொடர்பில்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய துணைத்தூதரிடம்  இசைமாலைத்தாழ்வு கிராம மக்கள் கோரியுள்ளனர்.

இந்த  விடயம் தொடர்பில் தன்னால் முடிந்தளவு முயற்சிகளை எடுப்பதாகவும் சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் இக்கிராமத்துக்கு சமூகமளிப்பதாகவும்; இந்திய துணைத்தூதர் இசைமாலைத்தாழ்வு கிராம மக்களுக்கு  உறுதியளித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .