2025 ஜூலை 16, புதன்கிழமை

சேதன பசளைகளை உபயோகிக்க பயிற்சி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள், சேதன பசளைகளை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அ.செல்வராஜா வியாழக்கிழமை (11) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மத்திய விவசாய அமைச்சால் மாவட்ட செயலகத்தினூடாக அனுப்பப்பட்ட நிதி மூலம் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் இரசாயன பசளைகளை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மண்வளம் மற்றும் நீர் வளம் என்பன பாதிக்கப்படுகின்றன.

இதனை தடுக்கும் நோக்கில், சேதன பசளைகளை உற்பத்தியாக்கி விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் பயிற்சி, அதற்கான உபகரணங்கள் என்பன விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் முதற்கட்டமாக முரசுமோட்டை பகுதியைச் சேர்ந்த 400 விவசாயிகளுக்கு புதன்கிழமை (10) உபகரணங்கள், பயிற்சிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து  வியாழக்கிழமை (11) இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 600 விவசாயிகளுக்கு உபகரணங்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் கிளிநொச்சியின் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .