2025 ஜூலை 16, புதன்கிழமை

இரத்தினபுரம் நீர்த்தாங்கி அமைக்கும் பணி பூர்த்தி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வந்த நீர்த்தாங்கியின் கட்டுமான பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிளிநொச்சி மாவட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பான் நாட்டின் 1,620 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் இரத்தினபுரம், பரந்தன் ஆகிய பகுதிகளில் இரண்டு நீர்த்தாங்கிகள் அமைக்கும் பணிகள் 2014 ஏப்ரல் மாதம் முன்னெடுக்கப்பட்டன.

1000 கனமீற்றர் கொள்ளளவை கொண்டதாக அமைக்கப்படும் இந்த இரண்டு நீர்த்தாங்கிகளும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 40 ஆயிரம் குடும்பங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவுள்ளது.

இந்த நீர்த்தாங்கிகளுக்கான நீர் இரணைமடு குளத்திலிருந்து பெறப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு குடிநீராக வழங்கப்படும்.

இரத்தினபுரம் பகுதியின் நீர்த்தாங்கியின் கட்டுமாண பணிகள் தற்போது பூர்த்தியடைந்ததை தொடர்ந்து, அந்த நீர்த்தாங்கிக்கான குழாய்கள் பொருத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும், பரந்தன் பகுதியில் அமைக்கப்படும் நீர்த்தாங்கியின் கட்டுமானப்பணிகள் 90 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாகவும், அந்த நீர்த்தாங்கியின் கட்டுமான பணிகள் முழுமையடைந்ததும் அதற்கான குழாய்கள் பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இரண்டு நீர்த்தாங்கிகளின் கட்டுமான பணிகள் பூர்த்தியடைந்து இவ்வருட இறுதிக்குள் நீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .