2025 ஜூலை 16, புதன்கிழமை

முழங்காவிலுக்கு கோழிக்குஞ்சு தயாரிக்கும் நிலையம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலகத்துக்கு உட்பட முழங்காவில் கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினருக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழிக்குஞ்சு தயாரிக்கும் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வியாழக்கிழமை முழங்காவில் கிருஷ்ணர் கோவில் வீதியில் அமைந்துள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சிறிதரன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினர் அரியரத்தினம், அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வை வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நெறிப்படுத்தினார். கிராம அபிவிருத்தி தொடர்பன இந்நிகழ்வில் பங்குகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் அமைச்சர் என்ற வகையில்  அமைச்சர் பா.டெனிஸ்வாரன் நன்றிகளை தெரிவத்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .