2025 ஜூலை 16, புதன்கிழமை

வெதுப்பகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா பிரமனாளங்குளம் கிராமத்தின் மக்களது பொருளாதார மேம்பாட்டுக்காக வெதுப்பகமொன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(12) பிரமனாளங்குளத்தில் இடம்பெற்றது.

வட மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சின் 1.5 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு பிரமனாளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளிக்கப்படவுள்ள இவ்வெதுப்பகம் அக் கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிசமைக்கவுள்ளது.

இந்நிகழ்வுக்கு வட மாகாண கிராமிய போக்குவரத்து மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகதாரலிங்கம், சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா, எம்.தியாகராஜா, அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .