2025 ஜூலை 16, புதன்கிழமை

கடலாமையை இறைச்சியாக்கியவருக்கு பிணை

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் வைத்து கடலாமையை இறைச்சியாக்கிய சந்கேதநபரை 25 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டார்.

அத்துடன், இது தொடர்பான வழக்கை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

மேற்படி நபர், பூநகரிக்கு அண்மிய கடற்பரப்பில் கடலாமையை பிடித்து, அதனை இறைச்சியாக்கிக் கொண்டிருக்கும் போது பூநகரி பொலிஸாரால் வியாழக்கிழமை (11) கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து மேற்படி நபர் வெள்ளிக்கிழமை (12) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .