2025 ஜூலை 16, புதன்கிழமை

ரூ. ஒரு இலட்சம் பெறுமதியான பாலைமரங்களுடன் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் 1 இலட்சம் ரூபாy பெறுமதியான பாலை மரக்குற்றிகளை உழவு இயwதிரத்தில் கடத்திs செல்ல முற்பட்ட ஒருவரை வியாழக்கிழமை (11) மாலை கைது செய்ததாக கிளிநொச்சி வட்டார வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரி எஸ்.பிரபாகரன் வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.

பூநகரி பிரதேச வனவள பாதுகாப்பு அதிகாரி எஸ்.தணிகாசலத்துடன் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளிலே இந்த பாலை மரக்குற்றிகள் பிடிக்கப்பட்டன.

சந்தேகநபர் மேற்படி மரக்குற்றிகளை முட்கொம்பன் காட்டிலிருந்து பூநகரி பகுதிக்கு கடத்தி செல்லும் போதே கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரையும், உழவு இயந்திரத்துடன் கூடிய பாலை மரக்குற்றிகளையும் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .