2025 ஜூலை 16, புதன்கிழமை

முதுரை, பாலை மரத்துண்டுகளை கடத்தியவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் பிரதேசத்தில் சட்ட விரோதமாக முதுரை மற்றும் பாலை மரத்துண்டுகளை வாகனமொன்றில் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் என்.பரஞ்சோதி வியாழக்கிழமை (11) உத்தரவிட்டார்.

புதன்கிழமை (10) இரவு நெடுங்கேணி பகுதியிலிருந்து முல்லைத்தீவு பிரதேசத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த குறித்த டிப்பர் வாகனத்தை மறைத்து பரிசோதனை செய்த முள்ளியவளை பொலிஸார், சட்டவிரோதமாக முதுரை மற்றும் பாலை மரத்துண்டுகள்  கொண்டு செல்லப்படுவதை அவதானித்ததுடன் சந்தேகத்தின் பேரில் டிப்பர் சாரதியை கைது செய்துள்ளனர்.

குறித்த டிப்பர் வண்டியில் கொண்டு செல்லப்பட்ட மரத்துண்டுகள் சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியை கொண்டவை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை வியாழக்கிழமை (11) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்தபோது சாரதியை இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு மாவட்ட பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .