2025 ஜூலை 16, புதன்கிழமை

கொள்ளைக்கார கும்பலுக்கு தடுப்புகாவல்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 12 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்ட ஐவரையும் ஞாயிற்றுக்கிழமை (14) வரையில் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், வெள்ளிக்கிழமை (12) அனுமதியளித்தார். 

கிளிநொச்சி பொலிஸார், நீதவானிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதவான் இந்த அனுமதியை வழங்கினார். 

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கடந்த வாரம் வீடொன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என ஐந்து சந்தேகநபர்கள் வியாழக்கிழமை (11) கிளிநொச்சி பகுதியில் வைத்து கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில், புதுக்குடியிருப்பில் 4 கொள்ளை சம்பவங்களுடனும், மாங்குளம், பூநகரி, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தலா ஒரு கொள்ளை சம்பவங்களுடனும் இவர்களுக்கு தொடர்புகள் இருப்பது தெரியவந்தது.

அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து முச்சக்கரவண்டியொன்றும், மூன்று மோட்டார் சைக்கிள்கள், தங்கக்கட்டிகள், சைக்கிள்கள், கோடாரிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .