2025 ஜூலை 16, புதன்கிழமை

அபிவிருத்தி சங்கங்களுடனான சந்திப்பு

George   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுடனான சந்திப்பு வவுனியா உள்ளக சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பல்நோக்கு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(12) காலை நடைபெற்றது.

மாவட்ட ரீதியாக கிராம அபிவிருத்தி சங்கங்களின் செயற்பாடுகளை நேரில் சந்தித்து அறிந்துகொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒர் அங்கமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது.

வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் நேரடியாக மக்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கேட்டறிந்ததுடன் ஒவ்வொரு கிராம அபிவிருத்தி சங்கங்களும் மாவட்டத்தின் அபிவிருத்தியில் பங்கெடுத்து மாவட்டத்தையும் எமது மாகாணத்தையும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்ல முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்ய வசதியாக விற்பனை நிலையம் ஒன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம்,  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  சிவசக்தி ஆனந்தன், எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

\

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .