2025 ஜூலை 16, புதன்கிழமை

மந்திரத்துக்கு பதிலாக திருக்குறள் சொல்லி திருமணம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


மாங்கல்ய மந்திரங்கள் எதுவும் ஓதப்படாமல், அதற்குப் பதிலாக திருக்குறள் சொல்லி நடத்தப்பட்ட திருமணமொன்று கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் ஐயர் இல்லை. சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் ஓதப்படவில்லை.

இருப்பினும், திருக்குறள்கள் சொல்லப்பட்டன. சுப முகூர்த்தத்தில் மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டி திருமணம் முழுமை பெற்றது.

கிளிநொச்சியில் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் கனகேஸ்வரன் உதயபாபு என்ற மணமகனுக்கு ஆசிரியையான இறைபிள்ளை அபிராமி என்பவருக்குமே இந்த திருமணம் நடைபெற்றது.

திருமணத்தை கிளிநொச்சி தமிழ் சங்க தலைவரும் மணமகளின் தந்தையுமான வே.இறைபிள்ளை தலைமையேற்று நடத்தியதுடன், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் ஆசியுரையினையும் வழங்கினார்.

இந்த திருமண நிகழ்வில், திருவள்ளுவருடைய திருவுருவப்படம் வைக்கப்பட்டு திருக்குறள் ஓதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • ramu Tuesday, 16 September 2014 10:38 AM

    மண மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். திருக்குறள் அன்பன்.
    ராமு,
    லண்டன்

    Reply : 0       0

    Thiruvalluvan Thursday, 02 October 2014 04:06 PM

    எங்கள் மகனுக்கும் இதேபோல் நடத்த உள்ளோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .