2025 ஜூலை 16, புதன்கிழமை

பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த நடத்துனர் பலி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், சுப்பிரமணியம் பாஸ்கரன்


பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த நடத்துனர் ஒருவர் பலியான சம்பவமொன்று கிளிநொச்சி, முறிகண்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, கோவில் புளியங்குளத்தைச் சேர்ந்த சந்திரன் தனுசன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ், முறிகண்டி பகுதியிலுள்ள  வளைவு ஒன்றில் திருப்ப முற்பட்ட வேளையில் பஸ்ஸின் முன்வாசலில் நின்றிருந்த நடத்துனர் தவறி கீழே விழுந்துள்ளார்.

இதன்போது, பஸ்ஸின் முன் சில்லு, நடத்துனர் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாங்குளம் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .