2025 ஜூலை 16, புதன்கிழமை

பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுமாறு நோர்வே தூதுவரிடம் கோரிக்கை

George   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுகொடுப்பதுடன் அவர்களுக்கு வருமான வழிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான உதவிகள் தேவை என இலங்கைக்கான நோர்வே தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் எச்.ஈ.கிறிட், கிளிநொச்சி மாவட்டத்திற்கு திங்கட்கிழமை (15) விஜயம் மேற்கொண்டு, யு.என்.டி.பி நிறுவனத்தால் நோர்வே அரசின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனை மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (16) காலை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு தொடர்பில் மாவட்ட செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

தூதுவர் முழங்காவிலுள்ள பால்பண்ணை மற்றும் கண்டாவளையில் அமைந்துள்ள வெல்ல தொழிற்சாலை ஆகியவற்றை பார்வையிட்டதுடன் அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

தூதுவரிடம் கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான அபிவிருத்தித்திட்டங்கள் செய்யப்படவேண்டும் என கோரியிருந்தேன்.

பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கள் தொடர்பில் தொடர்ந்தும் அக்கறை செலுத்துவதாக தூதுவர் உறுதியளித்தார்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .