2025 ஜூலை 16, புதன்கிழமை

வீடு கையளிக்கும் நிகழ்வு

George   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஊரியான் கிராமத்தில் அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிஸ் ஆகியவற்றின் நிதியுதவியுடன் யு.என் கபிரெட்  நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வரும் வீடுகளில் பூர்த்தியடைந்த வீடு ஒன்று திங்கட்கிழமை(15) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான உட்கட்டுமான அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிநிதிகள் டெறி, டெபுசா ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த வீட்டை பயனாளியிடம் கையளித்தனர்.

யு.என் கபிரெட் நிறுவனத்தால் மேற்படி கிராமத்தில் தலா 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 41 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பூர்த்தி செய்யப்பட்ட வீடு ஒன்றே திங்கட்கிழமை(15) பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் 2.5 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் அமைக்கப்பட்ட முன்பள்ளி கட்டிடத்தையும் இக்குழுவினர் திறந்து வைத்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .