2025 ஜூலை 16, புதன்கிழமை

முல்லைத்தீவில் முள்வேலி அமைத்து நில அபகரிப்பு: ரவிகரன்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயிலிருந்து கோட்டைக்கேணியூடாக மணலாறு மண்கிண்டி மலைக்குச் செல்லும் பாதைக்கு குறுக்காக முள்வேலிகள் அமைக்கப்பட்டு, நில அபகரிப்பு இடம்பெறுவதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மணலாறு பகுதியில் ஏற்கெனவே குளங்களோடு உள்ள தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்ட நிலையில் தற்போது மகாவலி எல்  வலயம் என்கிற போர்வையில் வர்த்தக நோக்கத்துடன் தமிழர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

தென்னை, மாமரச் செய்கைக்கு என்று 33 சிங்களவர்களுக்கு தலா 25 ஏக்கர் வீதம்  காணி அபகரிக்கப்பட்டு வேலிகள் இடப்பட்டுள்ளன.

இதற்காக தலா 3 இலட்சம் ரூபாய் முற்பணம் மகாவலி அதிகார சபையால் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.  இக்காணிகள் உப உணவுப் பயிர்ச் செய்கைக்காக ஏற்கெனவே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளாகும். அதனை அபகரித்து தற்போது சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நில அபகரிப்பின் உச்சக்கட்டமாக மண்கிண்டி மலையிலிருந்து கோட்டைக்கேணியூடாக கொக்குத்தொடுவாய்ச் சந்திக்கு செல்லும் பாதையின் பகுதியும் உள்வாங்கப்பட்டிருக்கிறது. அரச அமைச்சர் ஒருவரின் உறவினர்களுக்காக இப்பகுதி நிலங்கள் வழங்கப்பட்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை எந்தெந்த வகைகளில் முடக்கமுடியுமோ, அத்தனை வழிகளிலும் முடக்குவதில் குறியாக இருக்கிறார்கள்' என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .