2025 ஜூலை 16, புதன்கிழமை

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், மன்னார் விஜயம்

Super User   / 2014 செப்டெம்பர் 16 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


 - எஸ்.றொசேரியன் லெம்பேட்

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு மன்னார் மாவட்ட நீதிமன்றத்துக்கு வருகை தந்தார்.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், இன்று (16) காலை விசேட உலங்கு வானூர்தி மூலம்  மன்னார் தள்ளாடி படைத்தளத்தை வந்தடைந்த அவர், காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.

இதன் போது மன்னார் நுழைவாயிலான பாலத்திலிருந்து  மாலை அணிவித்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரவேற்கப்பட்டார்.

மன்னார் நீதிமன்ற வளாகத்தினுள் இடம் பெற்ற பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை பிரதம நீதியரசர் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவரது வருகையின் ஞாபகார்த்தமாக நீதியரசரால் மரக்கண்று ஒன்று நட்டப்பட்டது.

பின் மன்னார் நீதிவான் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் மன்னார் மேல் நீதிமன்ற ஆணையாளர் மகிந்த பினிதினிய தலைமையில் விசேட கூட்டம் இடம்பெற்றது.

இதன் போது  வரவேற்பு நடனம் மற்றும் அதிதிகள் உரை என்பன இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம், மன்னார் மேல் நீதிமன்ற ஆணையாளர் மகிந்த பினிதினிய உற்பட வவுனியா மாவட்ட நீதிபதிகள், மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள், மன்னார் நகர சபை தலைவர், பொலிஸ், இராணுவ, கடற்படை உயரதிகாரிகள் உட்பட திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இருதியில் மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகளினால் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிக்கு ஞாபகச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த மாதம் 15ஆம் திகதி பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மடுத்திருவிழாவுக்கு வருகை தந்திருந்தபோது நீதியரசரை மன்னாருக்கு வருகை தரும்படி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே அவர் மன்னார் வருகை தந்தமையும் குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .