2025 ஜூலை 16, புதன்கிழமை

கல்வியே எமது மூலதனம்: ஆனந்தன் எம்.பி

George   / 2014 செப்டெம்பர் 16 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்


இன்றைய காலச்சூழலை விடவும் மிகவும் இறுக்கமான பொருளாதாரத்தடைகள்இ அத்தியாவசிய வசதிகள் அற்ற நெருக்கடியான போர்க்காலச்சூழலிலும் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்கள் வன்னி மாவட்ட மாணவர்கள் என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த பதினாறு வருடங்களாக தமது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல், வவுனியா பூந்தோட்டம் இடம்பெயர்ந்தோர் முகாமில் அடிப்படை வசதிகள் ஏதுமற்றுஇ வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (15) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,


போரின் பாதிப்புகள் ஒருபுறம், அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு மறுபுறம் என்று, அன்றைய அனர்த்த சூழலை வெற்றி கொண்டு எமது மண்ணின் அன்றைய மாணவர்கள் சாதித்ததைப்போல, இன்றுள்ள கலாசார திணிப்புகள், வறுமை, விலைவாசியேற்றங்களை கடந்து இன்றுள்ள இந்த மண்ணின் மாணவர்கள் கல்வியில் சாதிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களிலிருந்து இடம் பெயர்ந்து 16 வருடங்களை கடந்தும், பல்வேறு அசௌகரியங்களோடு இந்த முகாமில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

உங்களுடைய கனவும்இ எங்களுடைய விருப்பமும் நீங்கள் எல்லோரும் சொந்த ஊருக்கு திரும்பிப்போக வேண்டும் என்பதேயாகும். காலம் கடத்தப்படும் உங்கள் மீள்குடியேற்றம் பற்றி நாம் பல அழுத்தங்களையும், வலியுறுத்தல்களையும் அரசுக்கு கொடுத்துக் கொண்டேயிருக்கின்றோம். நிச்சயம் சொந்த ஊர் திரும்பும் உங்கள் கனவு நிறைவேறும்.

இந்த முகாமிலேயே பிறந்து வளர்ந்த மாணவர்களும் இங்கு உள்ளார்கள். அவர்களின் கால்களும் அந்த மண்ணில் பதியும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்.

இந்த நம்பிக்கை ஒன்றே தடைகளை உடைத்துக்கொண்டு மேலெழுந்து வரும் சக்தியை வழங்கும். எத்தடைகள், இடர்கள் வந்தாலும் கல்வி கற்பதை மட்டும் இடைநிறுத்தி விடாதீர்கள்.

அதற்கு நாமும், புலம்பெயர் உறவுகளும் உந்துசக்தியாக இருப்போம். கல்வியே எமது மூலதனம், அதில் கை வைக்கும் உத்திகளையே காலம் காலமாக ஆட்சி பீடமேறிய அரசுகள் செய்து வந்திருக்கின்றன.

இதற்கெல்லாம் வாய்ப்புகள் வழங்காத வன்னி மாவட்டத்தின் முன்னைய மாணவர்களின் தொடர்ச்சியாகவே இன்றுள்ள மாணவர்களின் சாதனைகளும் தொடர வேண்டும் என்பதே எமது பேரவாவாகும்.

நாளை நீங்கள் உங்கள் சொந்த ஊரில் குடியேறலாம். கற்றுத்தேர்ந்து நல்ல பதவிகளில் இருக்கலாம். உயர் கௌரவ தொழில்களில் ஈடுபடலாம். பொருளீட்டலாம். நற்பணிகள் ஆற்றலாம். எதுவாகினும் உங்கள் எல்லா மூலோபாயங்களுக்கும் மூலதனம் கல்வியே ஆகும் என அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .