2025 ஜூலை 16, புதன்கிழமை

காலபோக செய்கைக்கான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை: ரூபவதி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணிம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் வரட்சியான சூழ்நிலை நிலவுவதனால் காலபோக நெற்செய்கைக்கான தீர்மானங்கள் எதனையும் எடுக்க முடியாதிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.

காலபோக செய்கை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தலில், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்ற நிலையில், காலபோக செய்கை தொடர்பான கூட்டம் இதுவரையில் நடத்தப்படவில்லை எனவும் இதனால் பயிர்ச்செய்கை மேற்கொள்வதில் சிக்கல் நிலைகள் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைப்புக்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள்.

இது தொடர்பில் மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது பாரிய வரட்சியை எதிர்கொண்;டிருக்கின்றோம். பருவமழையை அடுத்து தான் பயிர்ச்செய்கை பற்றியும் அதன் அளவுகள் பற்றியும் தீரமானிக்கப்படும்.

பருவமழையைத் தொடர்ந்து, காலபோக செய்கைக்கான கூட்டங்கள் உரிய காலத்தில் உரிய முறைப்படி நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.  அத்துடன், இந்த காலபோக செய்கைக்குரிய விதை நெல் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கமநலசேவை நிலையங்கள் ஊடாக விதை நெல் தேவையானோரின் பெயர், விபரங்கள் சேகரிக்கப்படும் நிலையில், பதிவுகளை மேற்கொள்வதற்கு விவசாய அமைப்புக்கள் அக்கறை காட்டவில்லை என்றும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .