2025 ஜூலை 16, புதன்கிழமை

கடல் நீர் உற்செல்வதை தடுக்கும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி ஆரம்பம்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 18 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.றொசேரியன் லெம்பேட்


அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகள் வாழ்வக ஸ்தாபனத்தின் பங்களிப்புடன் மன்னார் பள்ளிமுனை மேற்கு கிராமத்தில் அமைக்கப்படவுள்ள கடல் நீர் உள்வருவதை தடுக்கும் தடுப்புச்சுவர் அமைக்கும் வேளைத்திட்டம் நேற்று புதன் கிழமை(17) மாலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் நகரசபையின் அனுசரனையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வேளைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் 9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் திடீர் அனர்த்தத்தை தாக்குபிடிக்கும் வகையில் குறித்த வேளைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பள்ளிமுனை மேற்கு கிராம பகுதியில் குறித்த தடுப்புச் சுவர் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் மழைக்காலங்களில் கடல் நீர் தொடர்ச்சியாக கிராமங்களுக்குள் செல்லுவதினால் கிராம மக்கள் தொடர்ச்சியாக இடப் பெயர்வுகளை சந்தித்து வருகின்றனர்.இந்த நிலையிலே குறித்த பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ள என அவர் தெரிவித்தார்.

ஆரம்ப நிகழ்வில்  பள்ளிமுனை மேற்கு கிராமத்தில் அமைக்கப்படவுள்ள கடல் நீர் உள்வருவதை தடுக்கும் தடுப்புச்சுவர் அமைக்கும் வேளைத்திட்டத்தின் பெயர் பலகையினை வைபவ ரீதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய திறந்து வைத்தோடு அடிக்கல்லினையும் நாட்டி குறித்த வேளைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரரகாசம்,உபதலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.துரம், ஐக்கிய நாடுகள் வாழ்வக ஸ்தாபனத்தின் நிகழ்ச்சித்திட்ட அலுவலகர் எல்.ஜே.பிரசன்னா,மன்னார் நகரசபையின் செயலாளர் லேனாட் லெம்பேட்,மற்றும் மன்னார் நகர சபை உறுப்பினர்களான இ.குமரேஸ்,மெரினஸ் பெரேரா,என்.நகுசீன் உற்பட பள்ளிமுனை மேற்கு கிராம மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .