2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அரைக்கும் ஆலைக்கு அடிக்கல் நாட்டல்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலியாறு கிராமத்தின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு அரைக்கும் ஆலைக்காக அடிக்கல் நேற்று வியாழக்கிழமை நாட்டப்பட்டது.

இக்கிராம அபிவிருத்தியை கருத்திற்கொண்டு வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனால் இத்திட்டத்துக்காக 13 இலட்சம் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது.

இக்கிராமம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டமையால் அரைக்கும்  ஆலை அமைப்பதன் மூலம்  சிறந்த பயனடையமுடியும் என்பது தொடர்பில், வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சருக்கு தெரியப்படுத்தியதன் அடிப்படையில் இந்த ஆலைக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.வரப்பிரகாசம், அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன்,  கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .