2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருளைக்கிழங்கு விநியோகம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் வரட்சியால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு உருளைக்கிழங்குகள் விநியோகிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவி ஆணையாளர் ரி.என். சூரியகுமார் இன்று சனிக்கிழமை (20) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நீண்ட கால வரட்சியால் பல குடும்பங்கள் வரட்சியால் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில் பல கிராமங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வரட்சியால் பாதிப்படைந்த கிராமங்கள் மற்றும் மக்களின் விபரங்கள் பிரதேச செயலக மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் கோரப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு உருளைக்கிழங்குகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

ஒரு குடும்பத்துக்கு 5 கிலோகிராம் வீதம் சுமார் 10000 குடும்பங்களுக்கு இவ்வாறாக உருளைக்கிழங்குகள் பலநோக்கு கூட்டுறவுச்சங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .