2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

'சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் காணி விசாரணைகள் பக்கசார்பானவை'

Gavitha   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் காணி தொடர்பில் மன்னார் காணிக்கச்சேரியில்; சனிக்கிழமை (20) இடம்பெற்ற விசாரணைகள் திருப்திகரமற்றதாகவும் பக்கச்சார்புடனும் இடம்பெற்றதாக, மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

மன்னார் மாவட்டச் செயலகத்தில் உள்ள ஜெயிக்காக மண்;டபத்தில்  சனிக்கிழமை (20) நடமாடும் காணிக்கச்சேரி ஒன்று இடம்பெற்றது.

இக்காணிக்கச்சேரியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பின்னால் காணப்படும் காணி பிரச்சினை தொடர்பில், மன்னார் பிரதேச செயலாளரினால் முன்வைக்கப்பட்டது.

இதன்போது குறித்த காணிக்கச்சேரிக்கு மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் முன்னள் அதிபர், தற்போதைய அதிபர், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

1954 ஆம் ஆண்டிலிருந்து குறித்த காணியின் பூர்வீகம்,பராமரிப்பு தொடர்பில் சகல ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டு இக்காணியின் நிலைப்பாடுகள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டதோடு கடந்த 11-06-2011 அன்று மன்னார் நீதிமன்றத்தின் பணிப்பின் பெயரில் அக்காலப்பகுதியில் கடமையாற்றிய பிரதேசச் செயலாளர் ஊடாக மூர்வீதி மக்களுக்கு 13 காணித்துண்டுகள் வழங்கப்பட்டதுடன் மிகுதி பாடசாலை தேவைக்கு வழங்கப்பட்டது.

இதுவே இறுதி தீர்வாக வழங்கப்பட்டது. தீர்வுக்கான கடிதமும் வழங்கப்பட்டது. எங்களுடைய பழைய கோவைக்கு அமைவாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால் நாங்கள் சமர்ப்பித்த பழைய கோவைகளின் அடிப்படையில் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அவர்களின் அணுகுமுறையானது பக்கச்சார்பான தீர்வுக்கான விசாரணையாகவே அமைந்தது.

இவ் விசாரணையானது எமக்கு திருப்திகரமற்றதாகவும்,எமது கல்விச்சமூகத்திற்கு  எதிரான ஒரு தீர்ப்பாக அமையும் முகமாகவே இருந்தது.

எனவே இவ்விடயத்தில் எமது பாடசாலை சமூகத்திற்கு எதிராகவும், பக்கச்சார்பு தன்மையையும் பிரதிபலிப்பதையும் உணர்வதோடு ஏற்கனவே எமக்கூறிய காணிப்பகுதியில் இருந்து வழங்கப்பட்ட 13 காணித்துண்டுகள் போன்று இக்காணிப்பகுதியும் பறிபோவதற்கு அனுமதியளிக்க முடியாது.

எனவே நீதிக்கு  புறம்பான தீர்வு வழங்கப்படுமிடத்தில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து சாத்வீக போராட்டத்தை முன்னனெடுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .