2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வரட்சியால் கட்டுக்கரை குளத்தின் நீர் மட்டத்தில் வீழ்ச்சி

Gavitha   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவிவரும் வரட்சியின் காரணமாக முருங்கன் கட்டுக்கரை குளத்தின் நீர் மட்டமானது குறைவடைந்து வருகின்றது.

இதனால் கட்டுக்கரை குளத்தை அண்மித்த ஏனைய குளங்களுக்கான நீர் விநியோகமும் பெருமளவில் குறைந்துள்ளது. 

மேலும், குளத்து நீரை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி நிலையின் காரணமாக தமது விவசாய நடவடிக்கையானது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டுகின்றனர்.

கட்டுக்கரை குளத்தில் நன்னீர் மீன்பிடி நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டுக்கரை குளம் தோண்டப்பட்டு, அகலப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .