2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நிபந்தனை அடிப்படையிலேயே கேப்பாப்பிலவு காணிகள் மக்களிடம் கையளிப்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார்.

இராணுவத்தினரின் வசமிருந்த கேப்பாப்பிலவு - வாவெட்டி குளம், இயன்கன்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள 67 விவசாயிகளுக்கு சொந்தமான 320 ஏக்கர் விவசாய காணியும், விமானப்படையின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இயன்கன்குளம் பகுதியிலுள்ள 32 விவசாயிகளுக்கு சொந்தமான 82 ஏக்கர் வயல் நிலமும், வாவெட்டிக்குளம் பகுதியிலுள்ள 34 விவசாயிகளுக்கு சொந்தமான 240 ஏக்கர் வயல் நிலமும் கடந்த 18ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் திங்கட்கிழமை (22) கேப்பாப்பிலவு மக்களுக்கு அரிசி பைகள் வழங்கும் பொருட்டு அங்கு விஜயம் செய்திருந்தேன். அத்தருணத்தில் அப்பகுதி மக்கள், 'தங்களிடம் திருப்பி தரப்பட்ட காணிகள் நிபந்தனைகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ளதாக என்னிடம் கூறினார்கள்.

அதாவது, மீண்டும் இராணுவத்திற்கு காணிகள் தேவைப்பட்டால் இந்தக் காணிகளை மீண்டும் இராணுவத்துக்கு கொடுக்க வேண்டும், காணிகள் மீண்டும் தராவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தல் ஆகிய நிபந்தனை கடிதங்களில் கையெழுத்து வாங்கிய பின்னரே காணிகள் வழங்கப்பட்டுள்ளன என ஜெகநாதன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .