2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக இரண்டு உள்ளுராட்சி மன்றங்கள்

George   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச சபை மற்றும் கிளிநொச்சி நகர சபை ஆகியன உருவாக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி ஆகிய 4 பிரதேச செயலகங்கள் இருக்கின்றன. ஆனால், பிரதேச சபைகளாக கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று மாத்திரமே இருக்கின்றன.

கண்டாவளை, கரைச்சி பிரதேச செயலகங்கள் கரைச்சி பிரதேச சபையாகவே இருப்பதால் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. அதாவது, பரந்த பிரதேசத்தை ஒரு பிரதேச சபையால் நிர்வகிக்க முடியாத இக்கட்டான நிலை காணப்படுகின்றது.

209.7 சதுர கிலோமீற்றர் (20970 ஹெக்டேயர் நிலப்பரப்பு) பரப்பளவை கொண்ட கண்டாவளை பிரதேச செயலகத்தின் கீழ் 16 கிராமஅலுவலர் பிரிவுகளும் 104 கிராமங்களும் இருக்கின்றன. 

இதனால், கண்டாவளை பிரதேச சபை தனியாக உருவாக்கப்படவேண்டும் என பல்வேறு தரப்பட்டவர்கள் கருத்துக்கள் கூறினார்கள். இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் கூறுகையில்,

கிளிநொச்சி நகர சபையும், கண்டாவளை பிரதேச சபையும் புதிதாக உருவாக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி நகரப் பிரதேசத்தின் துரித வளர்ச்சியை கருத்தில் கொண்டும், கண்டாவளை பிரதேச மக்களுக்கு சிறந்த உள்ளூராட்சி சேவையை வழங்கும் நோக்குடனும் கிளிநொச்சி நகர சபையும், கண்டாவளை பிரதேச சபையும் உருவாக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக பொதுமக்களும் சமூக அமைப்புக்களும் அபிப்பிராயங்களை தெரிவிக்க முடியுமென கூறினார்.

இதன் மூலம் கிளிநொச்சி மாவட்டம் ஒரு நகர சபை, 4 பிரதேச சபைகளை கொண்டதாக மாற்றமடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .