2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வவுனியா மாவட்ட கலை இலக்கிய விழா

Gavitha   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்ட கலை இலக்கிய விழா இன்று செவ்வாய்க்கிழமை (23) வவுனியா மாவட்ட கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இசை, நடனம், கலை கலாசார செற்பொழிவுகள் நடைபெற்றது.

தொடர்ந்து பிற்பகல் ஒரு மணியளவில் வவுனியா மகாவித்தியாலய வீதியிலிருந்து கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உடைகள் அணிந்து மங்கள இசையுடன் காவடி, கோலாட்டம், கண்டியர் நடனம், போன்ற நிகழ்வுகளுடன் நடைபயண ஊர்வலம், வவுனியா நகர சபை கலாசார மண்டபம் வரை சென்றதன் பின்னர் கலாசார மண்டபத்தில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட கலாச்சார உத்தியோகஸ்தர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து இதில் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .