2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

காற்றுடன் மழை; மூவர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியாவில் செவ்வாய்க்கிழமை (23) மாலை திடீரென்று  கடும் காற்றுடன் மழை பெய்த நிலையில், மரமொன்றின் கிளைகள் கடும் காற்றினால் முறிந்து வீழ்ந்ததால் காயமடைந்த  தாயொருவரும் அவரது இரு பிள்ளைகளும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வவுனியா  நீதிமன்றத்துக்கு முன்பாக இருந்த மரமொன்றின் கிளைகளே  முறிந்துவிழுந்தன.

காற்றுடன் கூடிய மழையின்போது வவுனியா தாண்டிக்குளத்திலிருந்த தொலைத்தொடர்பு கோபுரமொன்றும் சரிந்து விழுந்தது. குளத்தின் வான் பகுதியினுள் இக்கோபுரம் விழுந்தமையால் எவரும் பாதிப்புக்குள்ளாகவில்லை.

மேலும், தாண்டிக்குளத்திலுள்ள பிள்ளையார் கோவில் மடப்பள்ளிக் கூரைத்தகரங்களும் கொட்டகைகளின் கூரைத்தகரங்களும் தேநீர்க்கடை மற்றும் அதனுடனிருந்த  மலசலகூடத்தின கூரைத்தகரங்களும் காற்றினால் அள்ளுண்டன.

சுமார் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாக பெய்த மழையால் வீதியோரங்களின் பள்ளமான பகுதிகளில் நீர் வழிந்து ஓடியதை காணக்கூடியதாக இருந்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .