2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அமைதி ஊர்வலம் : மகஜர் கைளிப்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-எஸ்.றொசேரியன் லெம்பேட்


தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையுடன், மன்னார் மாவட்ட 'வளர்பிறை' பெண்கள் தலைமைத்துவ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அமைதி ஊர்வலம் புதன்கிழமை (24) நடைபெற்றது.

மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க அலுவலகத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி, மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்து அங்கிருந்து மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.

ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள்,  தங்களின்  கோரிக்கை அடங்கிய மகஜரை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ராலின் டி மேலிடம் கையளித்தனர்.

மன்னாரிலுள்ள 13 கிராமங்களின் பிரச்சினைகள், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வை பெற்றுத்தருமாறு கோரி அமைதி ஊர்வலம் இடம்பெற்றது.

குறித்த ஊர்வலத்திற்கு பேசாலை மற்றும் வங்காலை மீனவர்களும் ஆதரவு தெரிவித்து ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறிப்பாக பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், அரசினால் கிடைக்கப் பெறுகின்ற உதவித்திட்டங்கள் அரசியல் ரீதியாக பாக்கச்சார்புடன் வழங்கப்படுவதாகவும் குறித்த ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

ஊர்வலத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிக் குரூஸ், மாவட்ட பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் ஜெரால்ட் மேரி பிரியந்தா, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஸ், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு பெண்கள் திட்ட இணைப்பாளர் ரவினா அசந்தி உற்பட மன்னார் மாவட்ட வளர்பிறை பெண்கள் தலைமைத்துவ அமைப்பின் பிரதி நிதிகள், மீனவ சங்க பிரதி நிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .