2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு இடி விழுந்ததில் தம்பதியர் காயம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார், பியரில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று வியாழக்கிழமை இரவு இடி விழுந்ததில், அவ்வீட்டிலிருந்த கணவன், மனைவி ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பிரதேசத்தில் நேற்று மாலை முதல் நிலவிய காலநிலை மாற்றம் காரணமாக இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது.

இந்நிலையில், இரவு 7.30 மணியளவில், தலைமன்னார் தபால் அலுவலகத்தில் கடமை புரியும் என்.பாலச்சந்திரன் என்பவரும் அவரது மனைவியும் வீட்டில் இருந்த சமயத்தில், அவர்களின் வீட்டுச் சுவரின் மீது இடி விழுந்து வீடு சிறு சேதத்துக்கு உள்ளாகியது.

அத்துடன், அங்கு பொறுத்தப்பட்டிருந்த மின் வயர்கள் முற்றாக எரிந்ததுடன் அங்கு இருந்த மின்சார உபகரணங்கள் யாவும் சேதமடைந்துள்ளன. குறித்த சம்பவம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அச்சமயத்தில் வீட்டில் இருந்த கணவனும் மனைவியும் இடி தாக்கத்துக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில், தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .