2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு உதவி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வட மாகாண சபை உறுப்பினர்களின் நிதியொதுக்கீட்டில் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (26) வவுனியாவில் இடம்பெற்றது.

வட மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசாவின் நிதியொதுக்கீட்டில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 10 கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு இவ் உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்போது, 450 கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

வவுனியா நகர், நெடுங்கேணி, செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவுகளை சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்கங்களின் கோரிக்கைக்கு இப்பொருட்கள் கையளிக்கப்பட்டன.

இதன்போது வட மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா, வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிஸியன்,

வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தே.மகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .