2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


 மன்னார் நகரசபைக்குட்பட்ட  பகுதிகளில் உள்ள கிராமங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுசரனையுடன் வெள்ளிக்கிழமை(26) நடைபெற்றது.

கடந்த 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம், சனிக்கிழமை (27) வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் பரிசுத்த பாப்பரசர் மன்னார் மடு தேவாலயத்துக்;கு வருகைதரவுள்ள நிலையில், விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம்,  கொழும்பிலிருந்து வருகைதந்துள்ள டெங்கு கட்டுபாட்டு திணைக்கள பணிப்பாளரின் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ், இராணுவம், கடற்படையுடன் இணைந்து பொது சுகாதார உத்தியோகஸ்தர்கள், சுகாதார திணைக்கள அதிகாரிகள்,பொது சுகாதார பரிசோதகர்கள்  உள்ளடங்கலாக சுமார் 300 பேர் டெங்கு ஒழிப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.றோய் பீரிஸ் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .