2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாணவன் துஷ்பிரயோகம் : அதிபருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கட்டுக்காரன் குடியிறுப்பு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 11 வயது மாணவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய  பாடசாலையின் அதிபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் வெள்ளிக்கிழமை (26) உத்தரவிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (23) காலை 10 மணியளவில் குறித்த அதிபர் பாடசாலையின் களஞ்சிய அறைக்குள் அழைத்துச் சென்று குறித்த மாணவனின் சீருடையை களைந்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

 இச்சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் சிறுவன் தெரிவித்ததையடுத்து, பெற்றோர் தலைமன்னார் பொலிஸாரிடம் முறையிட்டனர்.

இந்நிலையில் குறித்த சிறுவன் வியாழக்கிழமை (25) மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனையடுத்து, குறித்த பாடசாலையின் அதிபரை தலைமன்னார் பொலிஸார் கைது செய்து வெள்ளிக்கிழமை (26) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன் போதே மேற்படி உத்தரவினை நீதவான் பிறப்பிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .