2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பாலுட்டும் கட்டடம் திறந்து வைப்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தரும் தாய்மார் தங்களது குழந்தைகளுக்கு மறைமுகமாக இருந்து பாலூட்டும் குறையை தீர்த்து வைக்கும் நோக்குடன், மன்னார் பொது வைத்தியசாலையில் உலக தரிசன நிறுவனத்தின் நிதியுதவியுடன் தாய்மார் குழந்தைகளுக்கு பாலூட்டும் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

சுமார் நான்கு இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ் நிலையத்தை  வெள்ளிக்கிழமை(26) காலை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி றஜனி அன்ரனி சிசில்; ரீதியாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது, மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி வீ.ஆர்.சீ.லெம்பேட் மன்னார் உலக தரிசன நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஜெயபாலன்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகர் ஏ.எஸ்.எம்.சஜானி உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி றஜனி அன்ரனி உரையாற்றுகையில்,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முக்கிய தேவைகள் ஏற்படுகின்ற போது உலக தரிசன நிறுவனமும் பி.எஸ்.எல். நிறுவனம் ஆகியவை எமக்கு உதவி செய்வதில் பின் நிற்பதில்லை. அந்த வகையில் நாம் அனைவரும் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

அத்துடன் மன்னார் வைத்தியசாலைக்கு குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் கடந்த காலங்களில் தங்கள் குழந்தைகளுக்கு மறைமுகமாக இருந்து பாலூட்டுவதில் அசௌரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

ஆனால் தற்பொழுது; குறை தீர்வதற்கு வழி பிறந்துள்ளது.

இதற்காக உழைத்த மன்னார் பொது வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்திய கலாநிதி வீ.ஆர்.சீ.லெம்பேட் அவர்களுக்கும் நாம் பாராட்டு தெரிவிக்க கடமைபட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .