2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தமிழ் மாமன்றத்தின் விவாத பயிற்சி பட்டறை

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா தமிழ் மாமன்றம் வவுனியா பாடசாலை மாணவர்களின் விவாத ஆற்றலை மேம்படுத்தும் நோக்கோடு பாடசாலை மாணவர்களுக்கான விவாத பயிற்சி பட்டறையொன்றை வவுனியா தமிழ் மத்திய மாகாவித்தியாலய ஐயாத்துறை மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(27) ஏற்பாடு செய்திருந்தது.

மாணவர்கள் மத்தியில் இயல் துறையை வளர்க்கும் நோக்கோடு, தமிழ் மாமன்றம் வருடாந்தம் ஏற்பாடு செய்த மற்றும் செய்துகொண்டிருக்கும்  இவ்விவாத பயிலரங்கானது வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடைபெற்று வருகினறது.

தொடர்ச்சியான பயிற்சிகளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கியதன் பின்னர், வன்னியின் வாதச்சமர் எனும் போட்டி நிகழ்வினையும் தமிழ் மாமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

இதேவேளை கடந்த வருடம் இடம்பெற்ற வன்னியின் வாதச்சமர் நிகழ்வில் பங்கேற்று சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ்களும் இன்றைய நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் இலக்கியசுடர் ஐ.கதிர்காமசேகரன், வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் உட்பட பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .