2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தாய்மார் கழக அங்கத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

George   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள சிறார்களினதும் கர்ப்பிணித் தாய்மார்களினதும் போசனை மட்டத்தை உயர்த்துவதற்கு சேவையாற்றிய தாய்மார் கழக அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(30) இடம்பெறவுள்ளதாக கண்டாவளை சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்தார்.

தேசிய போசாக்கு மாதத்தினையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு தர்மபுரம் இல 01 பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இதில், கிராம மட்டங்களில் சிறார்களினதும் கர்ப்பிணித் தாய்மார்களினதும் போசனை மட்டத்தை உயர்த்துவதற்கு சேவையாற்றிய தாய்மார் கழக அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் வடமாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இ.தேவநேசன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்;, கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .