2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

காட்டு யானைகளின் அட்டகாசங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

George   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட மூன்றுமுறிப்பு கிராம பகுதியில் நிலவும் காட்டு யானைகளின் தொல்லைகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர், திங்கட்கிழமை(29) தெரிவித்தார்.

மூன்று முறிப்பு கிராமத்திற்குட்பட்ட வீரப்பிராயன்குளம், இளமருதன்குளம், மருதன்குளம் ஆகிய பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது.

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் தமது பயிர்ச் செய்கைகள் அழிவடைந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் பிரதேச செயலாளரிடம் கருத்து கேட்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 

மூன்றுமுறிப்பு கிராமத்தில் யானைகளின் அட்டகாசங்கள் தற்போது தான் ஆரம்பித்துள்ளன. இதற்கு முன்னர் குறைந்தளவிலேயே காணப்பட்டன. இதனால் எமது பிரதேச செயலக பிரிவில் யானைகளை துரத்துவதற்கான உபகரணங்கள் வழங்கப்படவில்லை. 

அத்துடன், இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளேன். அவர்கள் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரும் யானைகளை பாரம்பரிய யானை துரத்தும் முறைகளை பயன்படுத்தி விவசாயிகள் துரத்தி வருகின்றனர்.
தொடர்ந்து வரும் நாட்டிகளின் யானைகளின் அட்டகாசங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.

மேற்படி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(28) இரவு நுழைந்த காட்டு யானைகள் தென்னமரங்கள் சிலவற்றை அழித்து சென்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .