2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சேதன பசளை பாவனையை ஊக்குவிக்கும் திட்டம்

George   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விவசாயிகளிடையே இரசாயன பசளைகளின் பாவனையை குறைத்து, சேதன பசளைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 3000 விவசாய பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாய விரிவாக்கல் செயலகத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் எஸ்.செல்வராசா, செவ்வாய்க்கிழமை(30) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய செய்கைகளில் இரசாயன உரங்களை பாவித்து பயிர்செய்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் மண்வளம் பாதிக்கப்பட்டு வருகின்றமை பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய விவசாய அமைச்சின் கீழ் சேதன பசளைகளின் பாவனைகளை ஊக்குவிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 3000 விவசாய பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு சேதன பசளை உற்பத்தியாக்கல் தொடர்பான பயிற்சிகள் வழங்;கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா 25 கிலோகிராம் பொஸ்பேற்று பசளை உள்ளீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், சேதன பசளைகள் உற்பத்தியாக்க தேவையான பொலித்தீன் பைகளும் வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .