2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

உயிரிழந்த நிலையில் யானை மீட்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 30 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, புளியங்குளம் இராமனூர் பகுதியில் உயிரிழந்த நிலையில் யானையொன்றை மீட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இராமனூர் பகுதியில் புகையிரத கடவைக்கு அருகாமையில் யானையொன்று இறந்து கிடப்பதாக மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் இந்த யானையை மீட்டுள்ளனர்.

இப் பகுதியில் அண்மைக்காலமாக யானைகள் அட்டகாசம் அதிகரித்து காணப்பட்டதுடன் மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களை அழிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மிருக வைத்தியர் மூலமாக யானையின் மரணம் தொடர்பில் நாளை  ஆராயவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .