2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கைதுசெய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 01 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, கற்பகபுரம் கிராம அலுவலகரை தாக்கியதாகக் கூறி பொலிஸாரினால்; கைதுசெய்யப்பட்ட இருவரை விடுவிக்குமாறு கோரி வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (01) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இருவர் தாக்கியதாகக் கூறி  கிராம அலுவலகர் வவுனியா பொலிஸில் செய்த  முறைப்பாட்டை அடுத்து, மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட  இருவரையும் உடனடியாக விடுவிக்குமாறு கோரியும் இருவரும் கிராம அலுவலகரை தாக்கவில்லையெனக் கூறியும் கற்பகபுரம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில்  5 பேரை  அழைத்த வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர,  இந்தச் சம்பவம் தொடர்பான  விபரத்தை கேட்டறிந்தார். அத்துடன், ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறும் இதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .