2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தலைமன்னார் கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


தலைமன்னார் கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து துறை அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் புதன்கிழமை(1) மாலை குறித்த கிராமத்துக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடினர்.

மேற்படி கிராம மக்கள்  எதிர்நோக்கிவரும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக மீனவர்களும் ஏனை சுயதொழில் மேற்கொள்ளுகின்றவர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

இதேவேளை, மாதர், கிராம அபிவிருத்திச்சங்கங்களின் தற்போதைய நிலை தொடர்பிலும் எதிர்காலத்தில் குறித்த சங்கங்கள் வருவாயை ஈட்டிக்கொள்ளும் வகையில் மேற்கொள்ளவேண்டிய வேளைத்திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது வடமாகாண அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து குறித்த கிராமத்துக்கு செய்ய  ணே;டிய வேளைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .