2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி மாவட்ட செயலகம் ஜனாதிபதியால் திறக்கப்படும்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி, திருநகர் பகுதியில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கட்டிடத்தொகுதி எதிர்வரும் 12ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 210 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மேற்படி கட்டிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியது.

கிளிநொச்சி மாவட்ட செயலக நிர்வாக நடவடிக்கைகளுக்கு தேவையான சகல நவீன வசதிகளை கொண்டமைந்ததாக இந்த கட்டிடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து, கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் பூர்த்தியடைந்து கடந்த செப்டெம்பர் மாதம் ஒப்பந்தகாரர்களால் கட்டிடம் மாவட்ட செயலகத்திடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, மாவட்ட செயலகத்தினர் சம்பிராதயபூர்வமான பால் காய்ச்சும் நிகழ்வில் ஈடுபட்டனர். இந்நிலையில், மேற்படி கட்டிடத்தொகுதி எதிர்வரும் 12ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .