2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நிலக்கடலை திருடனுக்கு கடூழிய சிறை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

பெருந்தொகையான நிலக்கடலையை திருடிய குற்றவாளி ஒருவருக்கு 6 மாத கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

முள்ளியவளை, நாகதம்பிரான் கோவிலில் கடந்த 2012 பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி, குறித்த சந்தேகநபர் பெருந்தொகையான நிலக்கடலையை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு முள்ளியவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நடைபெற்று வந்தன.

இவர், தன்மீதான குற்றச்சாட்டை மறுத்து வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்தே, மேற்படி தண்டனை விதிக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .