2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பாப்பரசரின் மெய்ப்பாதுகாவலர் குழு மடுவுக்கு விஜயம்

Thipaan   / 2014 டிசெம்பர் 04 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


பாப்பரசர் பிரான்ஸிஸின்  மடு திருத்தல விஜயத்தை முன்னிட்டு, திருத்தலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய்வதற்காக, பாப்பரசரின் மெய்ப்பாதுகாவலர் குழு, மன்னார் மடு திருத்தலத்துக்கு இன்று வியாழக்கிழமை(04)  விஜயம் செய்தனர்.

இக்குழுவில் பாப்பரசரின் வழிபாடுகளுக்கான அருட்தந்தையர்கள் மற்றும் பாப்பரசரின் மெய்ப்பாதுகாவலர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

குறித்த குழுவினர் மடுத்திருத்தலத்தை சுற்றி பார்வையிட்டதோடு மேற்கொள்ளப்படவுள்ள திருப்பலி மற்றும் ஏனைய ஏற்பாடுகள் குறித்து மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை ஆகியோருடன் விரிவாக கலந்துரையாடினர்.

இதனைத் தொடர்ந்து பாப்பரசரின் மடு விஜயம் தொடர்பில் மடு திருத்தளத்தால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிழல் தொடர்பில் விரிவாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு வரும் பரிசுத்த பாப்பரசர்,  14ஆம் திகதி மாலை மடு திருத்தலத்துக்கு விஜயம் விசேட திருப்பலி ஆராதனையை நிறைவேற்றவுள்ளார்.

அத்துடன் மடுத்திருத்தலத்தில்  மடு மாதா திருச்சொரூப ஆசீர்வாதத்தை மேற்கொள்ளும் பரிசுத்த பாப்பரசர், நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் விசேட ஆசீர் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .