2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை

Thipaan   / 2014 டிசெம்பர் 10 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.தபேந்திரன்


கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு 223 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக, கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் க.முருகவேள், புதன்கிழமை (10) தெரிவித்தார்.

கல்வி வலயத்தில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு 1,735 ஆசிரியர்கள் இருக்கவேண்டிய நிலையில், 368 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவும் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.

அத்துடன், யாழ். மாவட்டத்திலிருந்து 2 வருட கால ஒப்பந்த அடிப்படையில் கிளிநொச்சி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றி வந்த 116 ஆசிரியர்கள் எதிர்வரும் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பந்தகாலம் முடிவடைந்து செல்கின்றனர்.

இவர்களுக்கு பதிலாக கிளிநொச்சி கல்வி வலயத்தில் நியமிக்கப்படும் ஆசிரியர்களின் இடமாற்ற பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதனால் பாடசாலைகளில் 2015ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது பெருமளவான ஆசிரியர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்க வேண்டிவரும் என கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .