2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இந்திய இழுவைப்படகுகளை தடுக்குமாறு கோரி பேரணி

Gavitha   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு கடற்பரப்பினுள் சட்ட விரோதமாக உட்பிரவேசிக்கும் இந்திய இழுவைப்படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் வெள்ளிக்கிழமை (12) காலை அமைதி எதிர்ப்பு பேரணியொன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கம் மற்றும் கூட்டுறவு அமைப்பின் சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பேரணியில், மும்மதத் தலைவர்களும் மாவட்ட கடற்தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கம் மற்றும் கூட்டுறவு அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு நகரிலுள்ள சென். பீட்டர்ஸ் ஆலயத்தின் முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பேணியானது, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரைக்கும் அமைதியாக ஊர்வலமாகச் சென்றது.

இதன்போது 'இந்திய இழுவைப்படகே அத்துமீறி இலங்கை கடலினுள் வந்து எமது மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டாதே, மின்சார ஒழியில் கடல் வளத்தை ஒழிக்காதே, அரசே இந்திய படகை வெளியேற்று. எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே' இதுபோன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திய நிலையில் மீனவர்களும் அமைப்பின் பிரதிநிதிகளும் பேரணியில் கலந்துகொண்டனர்.

பின்னர் இலங்கையின் முல்லைத்தீவு கடற்பிரப்பினுள் அத்துமீறி நுழைந்து இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிக்கும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி, மீனவ சங்கங்கள் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றை, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகத்திடம் கையளித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .