2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஊஞ்சல்கட்டி கிராமத்தில் மீள்குடியேறிய மக்கள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை

Sudharshini   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நெடுங்கேணி ஊஞ்சல்கட்டி கிராமத்தில் மீளக்குடியேறி அடிப்படை வசதிகள் இன்றி அவதியுறும் மக்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எம்.பி வெள்ளிக்கிழமை (12) நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது, தமது கிராமத்துக்குமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு மக்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இக்கிராமத்தில் மக்கள், யானைத்தொல்லையால் அவதியுறுவதாகவும் தமது வாழ்வாதாரத்துக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தனர்.

குறிப்பாக போக்குவரத்து வசதி இன்மையால் மூன்று கிலோமீற்றர் தூரம் காட்டுப் பாதைகள் ஊடாக நடந்து செல்ல வேண்டியுள்ளதாகவும் பாதைகளை சீர்செய்து பஸ் சேவைகளை ஏற்படுத்தி தருமாறும் அக்கிராம மக்கள் வலியுறுத்தினர்.

அத்துடன் தமது கிராமத்திலுள்ள குளங்களையும் புனரமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும், கனடாவிலிருந்து நலன்விரும்பியொருவரால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகை ஆடைகள் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது, வடமாகாணசபை உறுப்பினர்கள் இ.இந்திரராசா, ம.தியாகராசா, நெடுங்கேணி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தலைவர் கி.தேவராசா, சமுக சேவையாளர் சிவசேகரம், மருதோடை கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் ஜெயந்தன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .