2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறமாட்டோம்: சத்தியலிங்கம்

Gavitha   / 2014 டிசெம்பர் 13 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக நாம் கூறமாட்டோம். ஆனாலும் மக்களாகிய நீங்கள் எடுத்துள்ள தீர்மானத்துக்கு நாம் என்றும் உருதுணையாக நிற்போம் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுகாதார அமைச்சரினால் புதிய வேலர் சின்னக்குளத்தில் உள்ள மக்களுக்கு, வாழ்வாதார உதவிகள் சனிக்கிழமை (13) வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இது தேர்தல் காலம் என்பதனால், நாங்கள் எமது ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டும். ஒரு வருடத்துக்கு முதல் மாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாத்திரமன்றி, வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மிகவும் ஆர்வமாக வாக்களித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பை வெற்றி பெறச்செய்தனர். அதனை செய்தவர்கள் மக்கள்.

ஒரு நீதியான அரசாங்கம் வரவேண்டும் என்பதில் 30 வருடம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தேவையுள்ளது. ஆகவே நாங்கள் யாருக்கு வாக்களியுங்கள் என சொல்லமாட்டோம். ஆனால் யாருக்கு வாக்களிக்கவேண்டும் நீங்கள் ஏற்கெனவே தீர்மானித்தீருப்பீர்கள். அதற்கு நாம் துணையாக இருப்போம்.

எனவே உங்களது வாக்கை வேறு ஒருவர் பயன்படுத்தாத வகையில் நீங்கள் ஜனநாயக உரிமையை மாகாணசபைக்கு வந்து வாக்களித்ததையும் விட கூடுதலாக வருகை தந்து வாக்களித்து பயன்படுத்த வேண்டும்.

இதன் மூலம் எதிர்வரும் 8ஆம் திகதி வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் தங்களது ஆதங்கத்தையும் தீர்ப்பையும் சொல்ல வேண்டும்.
தற்போது உள்ள சொற்ப அதிகாரத்தை கூட எங்களால் பயன்படுத்த முடியவில்லை. செயற்படுத்துவதற்கு பல தடைகள் இருக்கின்றது. அதன் மூலம் மாகாணசபை சிறப்பாக இயங்க நல்ல காலம் வர வேண்டும். அதனை மக்கள் வாக்குகளை அளித்து உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .