2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் எந்த ஒப்பந்தங்களையும் நாம் செய்யவில்லை: மாவை

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் எந்த ஒப்பந்தங்களும் நாம் செய்யவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிப்பதாக   தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் வவுனியா விருத்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றது. இதன் பின்னர்  ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'தமிழரசுக் கட்சியின் செயற்குழு நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் இன்றைய அரசியல் நிலை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும்; கலந்துரையாடினோம்.

பல மாவட்டங்களிலுமிருந்து வந்த எமது உறுப்பினர்களின் அபிப்பிராயங்கள், எம்மால் கேட்கப்பட்டு கருத்து ஆராயும் கூட்டமாக நடைபெற்றது. இதன்போது, அவர்களின்  கருத்துக்கள் ஒருமித்ததாக இருந்தன. ஆனால், அந்தக் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு தீர்மானம் எடுக்கவில்லை. எங்களுடைய இந்தக் கருத்துக்களை ஒருமித்து தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு ஆராய்ந்து பொருத்தமான சிபாரிசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு கொடுக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே உரிய நேரத்தில் ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கும்.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்களுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளீகளா என்று கேட்டபோது, 'நாம் அவ்வாறான ஒப்பந்தங்களை செய்யவில்லை என்பதை  திட்டவட்டமாக  கூற விரும்புகின்றேன்' எனக் கூறினார்.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றவர்கள் பொதுவேட்பாளர்  மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான கருத்துக்களை மறைமுகமாக கூறுவது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது, 'அவ்வாறு யாரும் பகிரங்கமாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவேண்டும் என்று கூறவில்லை. ஆனால், பொதுமக்கள் வாக்களிக்கவேண்டும் என்ற கருத்தையே அவர்கள் வெளிப்படுத்தியதாக அறிகின்றோம்' எனக் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .