2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'கூலி வேலைக்கு சென்ற தம்பியும் மனைவியும் காணாமல் போயுள்ளனர்'

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 16 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, நெடுங்கேணிப் பகுதிக்கு கூலி வேலைக்காக சென்ற தனது சகோதரனும்  அவரது மனைவியும் 2007ஆம் ஆண்டு காணாமல் போனதாக  காணாமல் போனவரின் சகோதரி ச.நிர்மலாதேவி சாட்சியமளித்தார்.

காணாமல் போனோர் தொடர்பில்  விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்   விசாரணைகள் வவுனியாவில்  ஞாயிற்றுக்கிழமை (14) ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இதன் மூன்றாவது அமர்வு   வவுனியாவில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

இங்கு  அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,

'எனது தம்பியாகிய ச.சிவகுமாரசிங்கமும் (வயது 27)  அவரது மனைவியாகிய வசந்தகுமாரியும்  (வயது 25) 2007.3.21 அன்று நெடுங்கேணிக்கு கூலி வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது அவர்களின் பிள்ளையை நானே பராமரித்துவந்தேன்.

வேலைக்கு செல்பவர்கள் சிலவேளைகளில் கிழமைக்கு ஒருமுறை வருவது வழக்கம். எனினும்,  ஒரு கிழமைக்கு மேலாகியும் அவர்கள் வராத காரணத்தால், அவர்களை தேடிச்சென்றேன்.

பின்னர் மக்கள் இடம்பெயர்ந்து வந்ததன் பின்னர், இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் தங்கியிருந்த முகாமுக்கு எங்களை  கிராம சேவகர் கூட்டிச்சென்றார்.  அந்த முகாம்களிலும்  சென்று தேடினோம். அங்கு எவரும் இருக்கவில்லை.  அவர்கள் வேலை செய்ததாக கூறப்படும் இடங்களிலும் தேடினேன். ஆனால், அவர்களை இதுவரை காணவில்லை' என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .